மியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)
இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்டை ஒரு நிறுவனமாக எடுத்துக் கொள்வோம். இதில் நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக் ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள். யூனிட் என்றால் என்ன என்பதை பார்ப்பதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள்.
மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட் என்றால் என்ன ? (Mutual Funds Offer Document)
மியூட்சுவல் பஃண்ட் நிறுவனங்கள், தாங்கள் திரட்டிய நிதியை (Funds) பங்குச்சந்தையில் எந்தெந்த துறைகளில் (Sectors) முதலீடு செய்வார்கள் என்பதை பற்றியும், அவ்வாறு முதலீடு செய்யும்பொழுது எவ்வளவு வட்டி (Interest) கிடைக்கும் என்பதையும் பற்றியும், முதலீட்டை சார்ந்த விதிமுறைகளை (Terms & Conditions) பற்றியும் விளக்கும் தொகுப்பே “மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட்” ஆகும். எந்த ஒரு மியூட்சுவல் ஃபண்ட்-யில் முதலீடு செய்வதற்கு முன், அதனுடைய ஆஃபர் டாக்குமண்டை படித்து புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மியூட்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்யப்படுகிறது ?
மியூச்சுவல் ஃபண்ட் எந்த துறையில் முதலீடு செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள, அப்ஃபண்டின் ஆஃபர் டாக்குமண்டில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.
யூனிட் என்பது தமிழில் அலகு எனப்படும். யூனிட்கள் என்பது பங்குகளைப் (shares) போலதான்.
சரி ! யூனிட்களை எப்பொழுது வாங்கலாம் ?.
யூனிட்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்கள் அதை முதன் முதலாக வெளியிடும் பொழுதோ அல்லது அதற்கு பிறகு கூடவோ வாங்கிக் கொள்ளலாம். யூனிட்கள் (units) முதன் முதலாக வெளியிடும் பொழுது முகப்பு விலைக்கு (Face value) கிடைக்கும். அந்த நிதியினைக் (funds) கொண்டு வாங்கிய பங்குகளின் விலை ஏற்ற இறங்கங்களை பொறுத்து யூனிட்களின் விலை மாறுபடும்.
மியூட்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென்ன ?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க், பங்குச்சந்தையை சார்ந்தே அமையும் . எப்போதெல்லாம் பங்குச்சந்தை சரிவை சந்திக்குமோ அப்போதல்லாம் ஈக்விட்டி நிதிகளும் (Equity Funds) சரிவுவைக் காணும் .
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிபுணர்களின் ஃபண்ட் மேனேஜ்மெண்ட் திறமை முலம் பெருமளவு ரிஸ்க் குறைக்கப்படும்
Top Ranked Mutual Funds (By Money Control.com As on 11 feb 213)
Large Cap
| Crisil Rank |
NAV
(Rs./Unit) |
1 yr Return
(%) |
AUM (Rs. cr.)
Dec 12 | ||
---|---|---|---|---|---|---|
Birla SL Frontline Equity -A (G)
| Rank 1 |
99.22
| 18.2 | 2,935.67 | ||
Birla Sun Life Top 100 (G)
| Rank 1 |
25.56
| 15.2 | 297.68 | ||
Franklin India Bluechip (G)
| Rank 1 |
236.23
| 10.3 | 5,040.43 | ||
ICICI Pru Focused Bluechip Eqty (G)
| Rank 1 |
18.38
| 10.7 | 4,215.04 | ||
UTI Opportunities Fund (G)
| Rank 1 |
31.44
| 10.0 | 1,764.04 |