" காவிரிப்பூம்பட்டினம் " - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! .
கலை,இலக்கியம்,வீரம்,கொடை,ப ண்பாடு,நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம் ! . ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம்,இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் ! !.
தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்".பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம் ! !. காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது .
இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள்,இலங்கை,பர்மா,மாலத ்தீவு,வியட்நாம்,கம்போடிய,இ ந்தோனேசியா,வங்காள தேசம்,சிங்கப்பூர்,மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான் ! ! !. இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது ! !.
இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய பிரதான ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்" .இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது ! . இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது ! ! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் ! !. பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி" , இரவில் நடப்பது "அல்லங்காடி" ! !.
மருவுர்பாக்கம் :
ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது ! .இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் ! . இந்த ஊரை சுற்றி மீனவர்கள்,தறி நெய்பவர்கள்,பட்டு வியாபாரிகள்,மீன்,கறி வியாபாரிகள்,பானை,தானியங்கள ்.நகை,வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் ! .
பட்டினப்பாக்கம் :
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள்,மருத்துவர்,ஜோதி டர்,ராணுவம்,அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் ! !
இங்கு ஐந்து மன்றங்கள் இருந்துள்ளது
(௧) வெள்ளிடை மன்றம் (௨) எலாஞ்சி மன்றம் (௩) நெடுங்கல் மன்றம் (௪) பூதச்சதுக்கம் மட்டும் (௫) பாவை மன்றம்
இந்த ஊரில் இருந்த தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை (௨) உய்யணம் (௩) சன்பதிவனம் (௪) உறவனம் மற்றும் (௫) காவிரிவனம் போன்ற தோட்டங்கள் இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியது ! !.
பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது.அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர் ! ! . நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது ! !.
இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு .சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது .
"மணிமேகலை" நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது " வருடா வருடம் தவறாமல் " இந்திர விழா " கொண்டாடும் சோழ மன்னன் ,அந்த ஆண்டு கொண்டாடதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது .
இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் " சிலப்பதிகார அருங்காட்சியகம் " ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டுள்ளது ! . இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகள், வெளி வர வாய்ப்புள்ளது ! ! . தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்.அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை .தேடல் தொடரும்...!!
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா ! ! !
அன்புடன் உங்கள் வினோத் கண்ணா ! ! !
கலை,இலக்கியம்,வீரம்,கொடை,ப
தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்".பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம் ! !. காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது .
இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள்,இலங்கை,பர்மா,மாலத
இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய பிரதான ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்" .இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது ! . இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது ! ! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள் ! !. பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி" , இரவில் நடப்பது "அல்லங்காடி" ! !.
மருவுர்பாக்கம் :
ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது ! .இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர் ! . இந்த ஊரை சுற்றி மீனவர்கள்,தறி நெய்பவர்கள்,பட்டு வியாபாரிகள்,மீன்,கறி வியாபாரிகள்,பானை,தானியங்கள
பட்டினப்பாக்கம் :
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள்,மருத்துவர்,ஜோதி